பஸ் - கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - பக்தர்கள் 10 பேர் பலி!
பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டத்தில் பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து விபத்து
உத்தரபிரதேசம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா ஜனவரி 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 26ம் தேதி முடிவடையவுள்ளது.
இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில், சத்தீஸ்கரைச் சேர்ந்த பக்தர்கள் காரில் பிரயாக்ராஜ்க்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையில், காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
10 பேர் பலி
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்தில் ராஜ்கரை சேர்ந்த யாத்ரீகர்களும் இருந்துள்ளனர். தற்போது போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.