பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 10 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் - டி நரசிபுரா சாலையில் குருபுரு கிராமத்தின் பிஞ்சுரா கம்பத்தில் இன்று மதியம் நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் பேருந்து ஒன்றும் சொகுசு கார் மோதிய விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காரில் சிக்கியவர்களை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.