10 மணிநேரம் விசாரணை : கொடநாடு வழக்கில் சசிகலாவிடம் நடத்திய விசாரணை நிறைவு

V. K. Sasikala Kodanad Case
By Irumporai Apr 22, 2022 09:06 AM GMT
Report

மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை சசிகலாவிடம் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது  விசாரணை நிறைவடைந்துள்ளது.   

கடந்த 2017 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 217 பேரிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நேற்றும், இன்றும் விசாரணை மேற்கொண்டது.

நேற்று சசிகலாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இரண்டு நாட்களாக 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த விசாரணை நிறைவடைந்துள்ளது.

மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை சசிகலாவிடம் துருவி, துருவி கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பெற்று கொண்டனர்.