திருவாரூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் கைது : அதிர்ச்சியில் பொதுமக்கள்
By Irumporai
திருவாரூரில் 10 போலி மருத்துவர்களை கைது செய்து தனிடப்படை போலீசார் அதிரடி நடவடிக்கைஎடுத்துள்ளனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் முறையாக படிக்காமல் மருத்துவம் பார்த்த 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நடத்திய சோதனையில் தனிடப்படை போலீசார் போலி மருத்துவர்களை கைது செய்துள்ளனர்.

போலி மருத்துவர்கள்
இவர்கள் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும் வந்துள்ளனர் கைது செய்யப்பட்ட 10 போலி மருத்துவர்களையும் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.