இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இமாச்சல பிரதேசத்தில் இதுவரை ஆயிரக் கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது.
இதில் நூறிற்கும் மேற்பட்ட மக்களும் உழிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. நிவாரண பணிகளுக்க்காக ரூ.2 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இமாசல பிரதேச முதல்வர் சுக்விந்த சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை மத்திய அரசு ரூ.830 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழக அரசு நிவாரணம்
முன்னதாக வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்வீந்தர் சிங்கிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ. 10 கோடி நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/jZBakA07AM
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 22, 2023