உதயநிதி தலைக்கு 10 கோடியா..? ரொம்ப அதிகம்...! பாஜக விமர்சனம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் என்பது மிகவும் ஜாஸ்தி என பாஜகவின் சென்னை மாநகர கவுன்சிலர் உமா ஆனந்த் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
தலைக்கு 10 கோடி
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி இழிவாக பேசியதாக காரணம் காட்டி அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவரின் அவரது தலைக்கு பணம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
உத்திரபிரதேச மாநில அயோத்தியை சேர்ந்த பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவரை உதயநிதி படத்தை வாளால் தீயிட்டு கொளுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோடு நில்லாமல் அவர், தொடர்ந்து உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்திருந்தார்.
10 கோடி... ரொம்ப அதிகம்
இதனை தொடர்நது நேற்று அமைச்சர் உதயநிதி அறைந்தால் 10 லட்சம் அளிக்கப்படும் என விஜயவாடாவில் போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. இந்நிலையில், தான் தற்போது இது குறித்து பாஜகவின் கவுன்சிலர் உமா ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உமா ஆனந்த், அயோத்தி சாமியார் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தவறு என சுட்டிக்காட்டி, அது ரொம்ப அதிகம் என்றும் அதற்கு அவர் வொர்த் இல்ல என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி தலைக்கு 10 கோடி என்பது அதிகம், அதற்கு அவர் வொர்த் இல்லை
— Tamil Diary (@TamildiaryIn) September 8, 2023
- உமா ஆனந்த் #UdhayanidhiStalin pic.twitter.com/kHBneS5afc