இந்த பழக்கங்கள் மூளையை பாதிக்கும்.. தவறியும் இதை செய்யாதீங்க -எச்சரிக்கை அவசியம்!
மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மூளை
நம்முடைய அன்றாட வாழ்கையில் நம்மில் பலர் காலை உணவைச் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள். இப்படிச் செய்வதால் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. மேலும் மன அழுத்தம், அறிவாற்றல் செயல்திறனிலும், உற்பத்தித் திறனிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யும் பழக்கம் இருக்கும். இதனால் மூளைக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.இதன் மூலம் கவனம் செலுத்தும் திறன் குறையும்.
நம்மில் பலருக்கு வேலை செய்யும் போதும் சரி, பயணம் செய்யும் போது ஹெட்ஃபோன்கள் வழியாக அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது வழக்கம் .இப்படிச் செய்தால் செவியைப் பாதித்து மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிப்படையச் செய்கிறது.
மேலும் நம்மில் பலருக்கும் உரிய நேரத்தில் தூக்காமல் இருப்பது. குறுகிய நேரத்திற்குத் தூங்குவது மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. போதிய தூக்கம் இல்லாததால் மனச்சோர்வு பிரச்சனைகள், உடல் சோர்வு, அறிவாற்றல் குறைபாடு, நினைவாற்றல் மற்றும் நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும்.
எச்சரிக்கை
கண் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் ப்ளூ லைட் வெளிப்பாடு காரணமாக மூளையைச் சேதப்படுத்தும்.இந்த குறைபாடு ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவைகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் இது போன்ற பிரச்சனை ஏற்படும்.
ஜன்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, புகைப்பிடித்தல்,மது அருந்துதல் ,மன ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பது உள்ளிட்டவைகள் மூலம் மூளையைச் சேதப்படுத்தும்.