வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த 10 வயது பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிக்கண்டி கிராமத்திற்கு அருகில் 10 வயது பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கடந்த 20ம் தேதி உடல் நல குறைவால் யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் நேற்று காலை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.
கடந்த 3 வாரங்களுக்கு மேலாக உணவு உட்கொள்ளாமல் சுற்றி திரிந்துள்ளது. யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டது எப்படி??
யானையின் வாய் பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் யானைக்கு வனத்துறை மருத்துவர் குழு என 50 க்கு மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் யானை உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் யானையின் உடலில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்ததால் நேற்று யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து.
கோவையில் தொடர்ந்து யானைகள் உயிரிழப்பு நிகழ்ந்து வருவதால் வன ஆர்வளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.