வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

10.5 per cent reservation for Vanni canceled
By Thahir Nov 01, 2021 05:58 AM GMT
Report

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்து உயர்நீதிமனற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காண தீர்மனம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த பன்வாரி புரோகித் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவான எம்பிசி பிரிவில் 10 மேற்பட்ட ஜாதியினர் உள்ள நிலையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் 10.5 சதவீதம் வழங்க கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடைக்கால தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அப்போதைய தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.

இதையடுத்து கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 .5 சதவீதம் இட ஓதுக்கீடு வழங்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கினை சிறப்பு வழக்காக எடுத்துக்கொண்டு நீதிபதி துரைசாமி அமர்வு முன்பாக தினந்தோறும் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜரான பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் இந்த ஒதுக்கீடு நியாமானது நாங்கள் 14 சதவீதம் கேட்டிருந்த நிலையில் 10.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ள.என கடுமையாக வாதாடினார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் இது போன்ற ஒதுக்கீடு வழங்கக்கூடாது என கூறி வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஓதுக்கீட்டை ரத்து செய்தனர்.