வாள் தூக்கி நின்னான் பாரு: புதிய சாதனை படைத்த விராட் கோலி

IPL ViratKohli MI vs RCB
By Irumporai Sep 26, 2021 04:48 PM GMT
Report

ஐ.பி.எல். தொடரின் 39வது ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூர் மற்றும் 6-வது இடத்தில் மும்பை அணியும் மோதின. துபாய் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது.

முதல் ஆட்டத்தில்  பெங்களுரு 165 ரன்கள் எடுத்தது. ஓப்பனிங் களமிறங்கிய கோலி, படிக்கல் இணை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

வந்த வேகத்தில் பும்ராவின் பந்தில் படிக்கல் - அவுட்டாக  பின்னர் களமிறங்கிய பரத், கோலியுடன் சேர்ந்து 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்றார். 32 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுல் சஹார் பந்துவீச்சில் பரத் அவுட்டாகினார்.

அதனை தொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்கினார். கோலி - மேக்ஸ்வெல் இணை மற்றுமொரு 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்றது. இந்த போட்டியில் அரைசதம் கடந்த கோலி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 42வது அரை சதத்தை நிறைவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, டி-20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். டி-20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேனானார் கோலி 51 ரன்கள் எடுத்திருந்தபோது மில்னே பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி

. அடுத்து களமிறங்கியது ஏபிடி. மேக்ஸ்வெல் - ஏபிடி இணை கடைசி சில ஓவர்களில் பெரிய ஷாட்களை ஆடி பெங்களூருவின் ஸ்கோரை உயர்த்தினர். மேக்ஸ்வெலும் அரை சதம் கடந்து 56 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதே ஓவரில் ஏபிடியும் அவுட்டாக, கடைசி ஓவருக்கு கிறிஸ்டியனும், ஷபாஸ் அகமதும் களத்தில் நின்றனர்.

போல்ட் பந்துவீச்சில் ஷபாஸ் அகமது 1 ரன்னில் வெளியேறினார். போட்டி முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது பெங்களூரு அணி. ஐபிஎல்லில் இதுவரை: ஐபிஎல் வரலாற்றில் 6 முறை சாம்பியனான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர்

. இதில், மும்பை அணி 19 போட்டிகளிலும், பெங்களூர் அணி 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.