வா எனக்கு பவுலிங் போடு : ரோஹித் ஷர்மாவுக்கு பவுலிங் போட்ட 11 வயது சிறுவன்

Rohit Sharma T20 World Cup 2022
By Irumporai Oct 17, 2022 09:10 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 11 வயது சிறுவனை தனக்கு பந்துவீச சொல்லிய புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 T20 உலகக்கோப்பை

இந்த வருடத்திற்கான T20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெருகின்றன. இதனால் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிவென்றுள்ளது.

வா எனக்கு பவுலிங் போடு : ரோஹித் ஷர்மாவுக்கு பவுலிங் போட்ட 11 வயது சிறுவன் | 1 Year Old Swing Bowler Impresses Rohit Sharma

முன்னதாக பெர்த் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, 11 வயது சிறுவன் ஒருவனுடைய பவுலிங் திறமையை பார்த்து பாராட்டிய ரோஹித் ஷர்மா, தனக்கு பந்துவீசுமாறு சிறுவனிடம் கேட்டிருக்கிறார்.

ரோஹித் சர்மா

அந்த சிறுவனும் ரோஹித்திற்குசில பந்துகளை வீசச் சொன்னார். ரோஹித் சர்மா அந்த சிறுவனை தனக்கு பந்து வீசும் காட்சியாக அது இருந்தது.

அந்த சிறுவன் இந்திய கேப்டனுக்கு பந்து வீசியது மறக்க முடியாத தருணம்" என்றார். திருஷில் எனும் அந்த சிறுவனை இந்திய அணியின் டிரஸிங் ரூமிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர் அதிகாரிகள்.

அப்போது, இந்திய அணி வீரர்களுடன் சிறுவன் கலந்துரையாடியுள்ளான். அப்போது இந்திய அணிக்காக விளையாடுவதே தனது லட்சியம் என சிறுவன் கூறியுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.