+1 மாணவி துாக்கிட்டு தற்கொலை - இளைஞன் பின்தொடர்ந்ததால் விபரீத முடிவு..!

Uttar Pradesh
By Thahir Jul 26, 2022 07:51 AM GMT
Report

+1 மாணவியை இளைஞன் ஒருவன் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்ததால் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிக்கு தொடர் தொல்லை

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் சங்ஹர்ஹி அருகே உள்ள சண்டெ கிராமத்தை சேர்ந்தவர் +1 மாணவி.

அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் என்ற இளைஞன் பல நாட்களாக மாணவியின் பின் தொடர்ந்து சென்றுள்ளான்.

மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளான்.

தன்னை பின் தொடராதே.. என மாணவி பல முறை எச்சரித்துள்ளார். மேலும் மாணவியின் பெற்றோரும் இளைஞன் சஞ்சயை கண்டித்துள்ளனர்.அனைவரின் எச்சரிக்கையையும் மீறி சஞ்சய் அந்த மாணவியை தொடர்ந்து பின் தொடர்ந்துள்ளார்.

மாணவி தற்கொலை 

இதனால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

+1 மாணவி துாக்கிட்டு தற்கொலை - இளைஞன் பின்தொடர்ந்ததால் விபரீத முடிவு..! | 1 Student Commits Suicide

மாணவி துாக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050