Monday, Jul 7, 2025

பால் கேனில் மூழ்கி கிடந்த 1 மாத குழந்தை.. சடலமாக மீட்பு, கதறிய அதிகாரி - என்ன நடந்தது?

Death Theni
By Vinothini 2 years ago
Report

1 மாத குழந்தை பால் கேனில் மூழ்கி இறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன குழந்தை

கம்பம் கிராம சாவடி பகுதியைச் சேர்ந்த சௌந்தரவேல்​, பாண்டீஸ்வரி தம்பதி. இவர்களின் மகள்​ சினேகா, இவருக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பாக திருமணம் நடந்தது. தற்போது சினேகா தன் தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்றுள்ளார். பின்னர் சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்து, பாட்டி​ பாண்டீஸ்வரியின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.

1-month-old-baby-died-after-falling-into-milk-can

ஞாயிற்றுக் கிழமை காலை சினேகா, தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு குளிப்பதற்காக சென்றிருக்கிறார். பாட்டி அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபொழுது குழந்தையை காணவில்லை.

நண்பரை நம்பி சென்ற கல்லூரி மாணவி.. சீரழித்த சினிமா உதவி இயக்குனர் - அதிர்ச்சி!

நண்பரை நம்பி சென்ற கல்லூரி மாணவி.. சீரழித்த சினிமா உதவி இயக்குனர் - அதிர்ச்சி!

மர்ம மரணம்

இந்நிலையில், கம்பம் தெற்கு காவல் நிலைய​த்துக்கு வந்து புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்கும்பொழுது கடைசியாக குடுகுடுப்பைக்காரன் அந்த வழியாக சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் இருப்பதாக குழந்தையின் உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரித்தனர்.

1-month-old-baby-died-after-falling-into-milk-can

இதற்கிடையே சினேகாவின் வீட்டிலுள்ள ​20 லிட்டர் பால்​கேனில் குழந்தை ​சடலமாகக் கிடப்பதாக தகவல் கிடைத்தது. குழந்தையின் சடலத்தை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பொழுது அந்த குழந்தை ஏற்கனவே இறந்ததாக கூறியுள்ளனர்.

சினோகா குடும்பத்தினர், மற்றும் குடுகுப்பைகாரரிடம் நடந்து வரும் விசாரணை முடிந்த பின்னரே குழந்தை இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த குழந்தையை காப்பாற்ற முடியாமல் காவல் ஆய்வாளர் லாவண்யா கதறி அழுதுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.