1 மில்லியன் லைக்குகளை குவித்த விஜய் - தோனி புகைப்படம்
சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட தோனி - விஜய் புகைப்படம் கடந்த 24 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது.

சமீபத்தில் ஈசிஆர் பகுதியில் தொடங்கிய, இதன் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பின் தொடர்ச்சி நேற்று முதல் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் முதல் நடக்கும் ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸுடன் செல்ல கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.
விஜய் இருக்கும் அதே கோகுலம் ஸ்டூடியோவில் தாம் தோனியில் விளம்பர படப்பிடிப்பும் நடைபெற்றது. இந்த நிலையில் தோனியும், விஜய்யும் சந்தித்து உரையாடினார்கள்.

அவர்களின் புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த நிலையில், அப்புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்திருந்தது.
அந்தப் புகைப்படம் பகிர்ந்து 24 மணி நேரம் ஆவதற்குள்ளேயே 1 மில்லியன் லைக்ஸ்களைத்தாண்டி சென்று கொண்டிருகிறது.