சிறுவனின் வயிற்றுக்குள் கிடந்த 3 அடி கேபிள் ஒயர் - பரிசோதனையில் ஷாக்கான மருத்துவர்கள்...!
துருக்கியில் சிறுவனின் வயிற்றுக்குள் 3 அடி கேபிள் ஒயர் இருந்ததைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுவனின் வயிற்றுக்குள் கிடந்த 3 அடி கேபிள் ஒயர்
துருக்கி, டியார்பாகிர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு தொடர்ந்து குமட்டல் மற்றும் வயிற்று வலி இருந்து வந்தது. இது குறித்து தனது பெற்றோரிடம் சிறுவன் கூற, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் அச்சிறுவனை பரிசோதனை செய்தனர். அப்போது, எக்ஸ்ரே பரிசோதனையில் 3 அடி கேபிள் ஒயர் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. எண்டோஸ்கோப் மூலமாக சிறுவனின் குடலில் இருந்த கேபிள் ஒயரை மருத்துவர்கள் அகற்றினர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கேபிளின் ஒரு முனை சிறுகுடலுக்குள் சென்றதால், நாங்கள் கேபிளை அகற்றுவதில் மிகவும் சிரமப்பட்டோம். இறுதியாக சுருள் வடத்தை வெளியே இழுத்த பிறகு 3 அடி நீள ஒயர் வெளியே வந்தது என்றனர்.

1 meter charging cable and buckle found in 15-year-old boy's stomach #fridaymorning pic.twitter.com/aqmrWtCLy2
— Akıncı (@Aknc35624923) December 16, 2022