மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் - குதிரைக்கு முடி வெட்டினால் போதும்..!
குதிரையை பராமரித்து அதை அழகாக வைத்து பார்த்துக் கொள்வதற்கு மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது.
குதிரை பராமரிப்பாளர் கிடைப்பதே அரிது
ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, கத்தார், ஈரான், குவைத் ஆகிய நாடுகளில் பெரும்பாலும் அரபியேர்கள் அதிகளவில் உள்ளனர்.
இவர்கள் குதிரையை பெரும் செல்வந்தர்களின் கௌரவமிக்க செல்வமாக கருதப்படுகிறது. ஒருவர் எவ்வளவு அம்சமான குதிரையை வைத்திருகிறார் என்பதை பொருத்து அவருக்கான வசதி, அந்தஸ்து போன்றவற்றை பிறர் மதிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் தங்கள் வளர்க்கும் குதிரைகளை பராமரிக்க பராமரிப்பாளர்கள் கிடைப்பதே அரிதாக இருக்கிறது.
மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்
இதனால் குதிரை பராமரிப்பு பணிக்கான ஊதியமும் அதிகம். ஒரு குதிரைக்கு முடி வெட்டினால் சுமார் 150 டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுகிறதாம்.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 12 ஆயிரம் ஆகும். நல்ல கை தேர்ந்த தொழில்முறை பணியாளர் என்றால், ஒரு குதிரைக்கு முடி வெட்டுவதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும்.
சராசரியாக நாளொன்றுக்கு 10 குதிரைகளுக்கு முடி வெட்டிவிடும் பட்சத்தில் 1.20 லட்சம் ரூபாய் வருவாய் ஆக கிடைக்கும்.

குறிப்பாக குதிரையின் முதுகு, கழுத்து மற்றும் வால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முடியை மிக நேர்த்தியாக வெட்டிவிட வேண்டுமாம்.