Saturday, Jul 26, 2025

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வருகிற 19-ந் தேதி தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

1lakhtnpoliceincharge localbodyelections2022
By Swetha Subash 3 years ago
Report

வாக்குபதிவு நாலன்று தமிழகத்தில் ஒரு லட்சம் பொலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுகின்றனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று மாலையுடன் அனைத்து வகையான பிரசாரங்களும் முடிவடைகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வருகிற 19-ந் தேதி தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு | 1 Lakh Police In Charge During Tn Elections

இந்நிலையில், வாக்குபதிவு நடைபெறும் நாலன்று எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்திடாமல் தடுக்க தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் காவலர்கள்,

12 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்பட சுமார் 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வருகிற 19-ந் தேதி தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு | 1 Lakh Police In Charge During Tn Elections

குறிப்பாக சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவல்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

எக்காரணத்தை கொண்டும் தேர்தல் நாள் அன்று அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள்,

போலீஸ் கமி‌ஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சார்பாக உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.