கும்பமேளாவில் பங்கேற்ற ஒரு லட்சம் பேருக்கு போலியான கொரோனா பரிசோதனை

Kumbh Mela festival Fake covid19 result
By Petchi Avudaiappan Jun 15, 2021 01:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததாகக் கூறி போலியான பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிய போது, ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் லட்சக்கணக்கானவர்கள் கூடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் பங்கேற்ற ஏராளமானோருக்கு கொரோனா பரவியதால் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 22 தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததாக ஒரு லட்சம் போலியான பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஹரித்வார் மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.