கடன் தொல்லையால் சொந்த வீட்டை விற்கும்போது பெயிண்டருக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்...!
கடன் தொல்லையால் சொந்த வீட்டை விற்கும்போது பெயிண்டருக்கு சூப்பர் ஜாக்பாட் அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெயிண்டர் முகமது
கேரளாவைச் சேர்ந்தவர் முகமது. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய மகள்கள் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். கடன் தொல்லையிலிருந்து விடுபட தன்னுடைய சொந்த வீட்டை ரூ.45 லட்சத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்தார்.
சூப்பர் ஜாக்பாட்
இதனையடுத்து, அவர் கடந்த 24ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை விற்க முன்பணம் வாங்க இருந்தார். ஆனால், அதற்கு முன் 3 மணிக்கு அவர் வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி விழுந்தது. இதனால், பெயிண்டர் முகமது மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.
கடன் தொல்லையால் சொந்த வீட்டை விற்கும்போது, லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த சம்பவம் அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.
